Tuesday 19 June 2012

ஐபேட்களுக்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட்டின் Surface டேப்லெட்ஸ் அறிமுகம்

 மைக்ரோ சாப்ட் நிறுவனம் Surface Windows 8 Tablet களை இன்று சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

TouchScreen வசதி, கீபோர்ட் வசதி என இருவகையான சேவைகளை  கொண்ட குறித்த கணிணிகள், மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கும் Windows 8 ஆபரேட்டிங்க் சிஸ்டத்துக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் Intel அல்லது ARM Based Processor களை தெரிவு செய்யும் வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் iPads களை அறிமுகப்படுத்தியதுடன், post-PC era எனும் புதிய உலகில் பயணத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தற்போது தனது சொந்த கணணிகள் மூலம் Tablet சந்தையில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.



 சொந்தமான துணை ஹார்ட்வேர்களுடன் உருவாக்கப்பட்ட மென்பொருள்களை பாவணையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். விண்டோஸ் 8 தனது சொந்த ஹார்ட்வேருடன் இதன் மூலம் சந்தைக்கு வருகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார்.

10.6 நீளம் கொண்ட  திரையுடைய குறித்த டேப்லெட்டுக்கள் மேக்னெடிக் கவசங்கள் கொண்டவையாக உள்ளன Surface நிச்சயம் iPad மற்றும் Android விற்பனையில் வீழ்ச்சி ஏற்படுத்தும் என்கிறார்கள். MS Office 15 முதலான தொழில் நோக்குடைய சோப்ட்வேர்களும் இதில் இயங்க முடியும் என்பதால் மேலும் கவனத்தை பெற்றுள்ளது.


எனினும் குறித்த Surface டேப்லெப்ட்டுக்களின் விலை இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை.

மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு இடையிலான தொழில்நுட்ப போட்டியில் மற்றுமொரு அங்கமாக குறித்த டேப்லெட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், கூகுள் நிறுவனமும் விரைவில் தனது சொந்த டேப்லெட்களை அறிமுகப்படுத்தும் என்கிறார்கள்.


0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP